செய்முறை - அடிகனமான பாத்திரத்தில் 1 டீஸ்பூன் நெய் விட்டு பாசி பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். உடன் பச்சரிசியை போட்டு ஒரு வதக்கு வதக்கி உடன் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- தண்ணீர் குறைந்து கொண்டே வரும் கொதிக்க வைத்த தண்ணீர் வைத்திருந்தால் குறைய குறைய் தண்ணீர் சேர்க்கலாம் அரிசி வேகும் வரை.
- வேறு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கையால் தண்ணீர் தெளித்து காய்ச்சவும். தூசிகள் இருந்தால் வந்து விடும். சூடு படுத்தினாலே போதும்.
- அரிசி வெந்த சமையத்தில் ஏலக்காய்,காய்ச்சிய பால், 1 ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
- நன்றாக குழைந்து வெந்து வரும். அப்போது நெய்யில் வருத்த முந்திரி, திராட்சை போட்டு கிளறி மீதியுள்ள நெய் ஊற்றி இறக்கவும் .
- சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி.
|